• Jan 19 2025

தென்னிந்திய பிரபலங்களை கண்டுகளிக்க காட்டாற்று வெள்ளம் ஓடிய யாழ்ப்பாணீஸ்! வைரலாகும் வீடியோ

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

இலங்கையில் நடைபெறவுள்ள Northern Uni இன் பிரமாண்ட இசைநிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை சென்றடைந்து உள்ளார்கள்.

இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தென் இந்திய பிரபலங்களான நடிகர் சிவா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்யதர்ஷினி, ஆலியா மானசா, நந்தினி, மகாலட்சுமி, நடிகை ரம்பா, கலா மாஸ்டர் உள்ளிட்டோர் யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளனர். 

அவர்களை தொடர்ந்து நேற்றைய தினம், நடிகை தமன்னா,காமெடி நடிகர் யோகி பாபு, புகழ் ஆகியோர் யாழ்ப்பாணத்தை  சென்றடைந்துள்ளார்கள்.


இதை தொடர்ந்து யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஹரிஹரன் இசை நிகழ்வு பிரம்மாண்டமாக நேற்றைய தினம் நடைபெற்று உள்ளது.


இந்த நிலையில் தென்னிந்திய நடிகர்களை காண்பதற்காக போலீசாரின் கட்டுப்பாட்டுகளை மீறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் கட்டவிழந்து ஓடிய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

பிரபல பாடகர் ஹரிஹரன் இசை நிகழ்ச்சி கலந்து கொள்வதற்காக தென் இந்திய திரைப்பட நடிகர்கள், நடிகைகள் சென்ற நிலையில், அவர்களை பார்ப்பதற்காக சென்ற ரசிகர்கள் செய்த காரியம் தற்போது வைரலாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement