• Feb 17 2025

30 வருடமாக சினிமாவில் போராடிய முக்கிய பிரபலம் திடீர் மரணம்! பேரதிர்ச்சியில் திரையுலகினர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நுழையும் அனைவரும் தாம் ஒரு முன்னணி இடத்திற்கு வரவில்லை என்றாலும், தங்களின் நிலையான இடத்தை தக்கவைத்துக் கொள்ள நினைப்பது எதார்த்தமான ஒன்று.

அதன்படி முப்பது வருடமாக சினிமாவை போராடிக் கொண்டிருந்த திருமாறன், திறமை இருந்தும் வாய்ப்புக்காக ஏங்கிக்  கொண்டிருந்த நேரத்தில், அவருக்கு வாய்ப்பு வந்த பின்பு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1994 ஆம் ஆண்டில் வெளியான 'காலம் மாறிப்போச்சு' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் திருமாறன்.


இதை அடுத்து 1998 ஆம் ஆண்டு வெளியான  'கோல்மால்' படத்தின் மூலமாக பாடல் ஆசிரியராக மாறினார்.

அதன்பின்  பாடலாசிரியருக்கான வாய்ப்பு சரியாக கிடைக்காததால் தொடர்ந்து உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.

தான் எழுதும் பாடலுக்கு தானே வித்தியாசமான மெட்டுக்களை போட்டு அதை பாடலாகவும் மாற்றம் திறமை கொண்டவர். ஆனாலும் இவருக்கு திறமை இருந்தும் தொடர்ந்தும் வாய்ப்புகள்  மறுக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் முப்பது வருட காலமாக சினிமாவில் தன்னை நிலை நிறுத்த போராடிக் கொண்டிருந்த வி சேகரின் உதவி இயக்குனரும், பாடலாசிரியருமான திருமாறன் உயிரிழந்துள்ளார். இவர்  உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அத்துடன் தற்போது தான் இன்னும் ஒரு படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியிருந்த நேரத்தில், உடல் சரியில்லாமல் திடீரென மரணம் அடைந்துள்ளார்.

திருமாறனுக்கு மனைவியும் மகளும் உள்ள நிலையில், அவரது  இறுதிச்சடங்குகள் நாளை அம்பத்தூரில் நடைபெற உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement