• Dec 06 2024

விஜய் பட நடிகருக்கு அடித்த ஜாக்போட்..! பிக் பாஸில் நுழையவுள்ள ஐந்து பொக்கிஷங்கள்..?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த முறை ஆட்டமும் புதுசு ஆளும் புதுசு என்ற வகையில் விஜய் சேதுபதி இந்த சீசனை தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.

இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் முதலாவது ஆகவே தயாரிப்பாளர் ரவீந்தர் எலிமினேட் ஆனார். அதன் பின்பு அர்ணவ், தர்ஷா குப்தா ஆகியோர்கள் எலிமினேட்டாகி வெளியே சென்றார்கள். மேலும் இந்த வாரம் கேப்டன்சி டாஸ்க் முத்து வெற்றி பெற்றுள்ளார். அதன் பின்பு நடைபெற்ற நாமினேஷனில் அன்சிகா தீபக், ஜெப்ரி, ஜாக்லின்,ரஞ்சித், சுனிதா, சத்யா, பவித்ரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள்.

d_i_a

தீபாவளி தினமான நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டில்  கோபதாபங்களை எல்லாம் மறந்து போட்டியாளர்கள் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள். அத்துடன் இந்த வாரமும் நாமினேஷன் ஃப்ரீ பாஸில் பெண்கள் அணிதான் வெற்றி பெற்று உள்ளது.

இந்த நிலையில், பிக் பாஸ் எட்டாவது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக ஐந்து போட்டியாளர்கள் உள்ளே செல்ல உள்ளதாகவும் அது தொடர்பான விபரமும் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.


அதன்படி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்த ராணவ் பிக் பாஸ் வீட்டில் நுழைய உள்ளாராம். இவர் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

அதேபோல 2023 ஆம் ஆண்டு நடந்த மிஸ் சென்னை போட்டியில் இரண்டாவது ரன்னர் இடத்தை பிடித்த ரியா தியாகராஜன் இந்த சீசனில் நுழைவதற்கான வாய்ப்பு உள்ளது.

மேலும் பட்டிமன்ற பேச்சாளரான மஞ்சரி விஜய் டிவியில் நடைபெற்ற ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்துள்ளார். சமீபத்தில் இவர் தீபாவளி சிறப்பு பட்டிமன்றத்திலும் கலந்து பேசி உள்ளார்.

மாடல் அழகியான வர்ஷினி வெங்கட் பல பேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமாக காணப்படுகின்றார். மிஸ் கோல்டன் பேஸ் ஆப் சவுத் இந்தியா போட்டியில் இரண்டாம் ரன்னர் இடத்தையும் பிடித்துள்ளார்.

விஜய் டிவியின் சீரியல் நடிகரான ரியான், தமிழும் சரஸ்வதி சீரியலில் வில்லனாக நடித்திருந்தார். இவர் தற்போது பனிவிழும்  மலர்வணம் தொடரில் நடித்து வருகின்றார். இவ்வாறு இவர்கள் ஐந்து பேரும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டில் நுழைய வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement