• Jan 19 2025

ஓரிரு நாட்களில் 100 கோடியை அடித்து நொறுக்கிய அமரன்.! தவிடுபொடியான GOAT ரெக்கார்ட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!







தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக காணப்படும் சிவகார்த்திகேயன் தற்போது ரசிகர்களின் பேவரைட் ஹீரோவாக காணப்படுகிறார். இவர் தனது விடாமுயற்சியின் காரணமாக இன்று தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே வெற்றி படத்தை கொடுப்பதற்காக போராடி வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான அயலான் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான போதும் வசூலில் படுதோல்வியை சந்தித்தது.

இதை தொடர்ந்து கடுமையான சவால்களுக்கு மத்தியில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் தான் அமரன். இந்த படத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

d_i_a

அமரன் திரைப்படம் சுமார் 130 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். தீபாவளியை முன்னிட்டு 6000 திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆனது.


அமரன் திரைப்படம் வெளியாகி முதல் நாளிலேயே 42.3 கோடிகளை உலக அளவில் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  


இந்த நிலையில் அமரன் படத்தின் இரண்டாவது நாள் வசூல் மட்டும் தமிழகத்தில் 20 முதல் 25 கோடி இருக்கும் என கூறப்படுகின்றது. இதன் காரணத்தினால் அமரன் திரைப்படம் இரண்டு நாட்களிலேயே 68 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஓரிரு நாட்களிலேயே 100 கோடி ரூபாயை கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் 'கோட்' திரைப்படம், இரண்டாவது நாளில் தமிழகத்தில் ரூ.22 கோடி மட்டுமே வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement