• Sep 21 2024

அது ஒரு கெட்ட கனவு மாதிரி இருக்கு- புதிய பட வாய்ப்பால் திரௌபதி படத்தை கேவலமாகப் பேசிய நடிகை ஷுலா

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஆறாது சினம், டூ லெட், மனுசங்கடா, அசுரவதம், கும்பலாங்கி நைட்ஸ், நம்ம வீட்டுப் பிள்ளை, திரெளபதி, மண்டேலா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார். இவர் தற்பொழுது பர்முடா மற்றும் மாயத்திரை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று சர்ச்சையைக் கிளப்பி வைரலாகி வருகின்றது. அந்த பேட்டியில் சமூக அக்கறை கொண்ட படங்களில் நடித்து வரும் நீங்கள், திரெளபதி படத்தில் நடிச்சது பற்றி எப்படி பார்க்குறீங்க? என்கிற கேள்விக்கு, அது ஒரு கெட்ட கனவு மாதிரி இருக்கு. இயக்குநர் தனக்கு முழு கதையையும் சொல்லவில்லை. தன்னை ஏமாற்றி படமெடுத்து வெளியிட்டு விட்டார் என ஷீலா ராஜ்குமார் பேசியது தான் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் 2020ம் ஆண்டு நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியான திரெளபதி திரைப்படம் நாடக காதலை அடிப்படையாக வெளியானது. பெரிய வீட்டுப் பெண்களை காதலிப்பது போல ஏமாற்றுபவர்களுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக அந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது .

பெரும் சர்ச்சையை கிளப்பிய இப்படத்தால் சில இயக்குநர்கள் மோகன் ஜி உடன் நேரடியாக சண்டையே போட்டனர். விஜய் டிவி, அமேசான் பிரைமில் வெளியான இந்த படத்துக்கும் ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பின.

இந்த நிலையில் இப்படம் வெளியாவதற்கு முன்னதாக இதே ஷீலா ராஜ்குமார் அந்த படத்திற்கான புரமோஷன் வீடியோவில், இயக்குநர் கதை சொல்லும் போது பெண்களுக்கான வலிமையான கதையாக இருந்தது. இந்த படத்தை நிச்சயம் அப்பாக்கள் பெண் பிள்ளைகளுடன் வந்து தியேட்டரில் பார்க்கலாம் என பேசியிருந்தார்.

இப்போது தற்பொழுது இப்படி ஏமாற்றி விட்டதாக பேசுவது ரசிகர்களை கடுப்படையச் செய்துள்ளது.புதிய படத்துக்கான புரமோஷனுக்காக பழைய படத்தை மட்டம் தட்டிப் பேசுவது இப்போ எல்லாம் நடிகைகளுக்கு ஃபேஷன் ஆகி விட்டது என ரசிகர்கள் திட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement