• Jan 19 2025

ரோகிணியின் திருட்டு தனத்தால் பிரச்சினையில் சிக்கப்போகும் மீனா! வெளியான ப்ரோமோ

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் தற்போது விறு விறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதில் ரோகிணி தனது குழந்தையை புதிதாக ஸ்கூல் மாற்றிய நிலையில், அதனை பிஏ கண்டுபிடித்து க்ரிஷுடன் போட்டோ எடுத்து அதனை ரோகினிக்கு அனுப்புகின்றார். மேலும் தனக்கு 30 லட்சம் தருமாறும் தந்தால் தான் உன் வழியில் இனி குறுக்கிட  மாட்டேன் என்றும் மிரட்டுகின்றார்.

இதன் காரணத்தினால் ரோகினி சிட்டியிடம் சென்று தனக்கு ஒருவர் பிரச்சினையாக இருப்பதாகவும் அவனை ஏதாச்சும் பண்ணிடுங்க..எனது பக்கமே வரக்கூடாது என்று சிட்டியிடம் சொல்லுகிறார்.

இதைக் கேட்ட சிட்டி, உங்களோட மாமியார் காசு கொஞ்ச நாளைக்கு முதல் காணாமல் போச்சு தானே.. அதை எடுத்தது சத்யாத்தான் அதற்கான சிசிடிவி வீடியோ ஒன்று முத்துவின் ஃபோனில் உள்ளது அதை எடுத்து தாறுமாறு கேட்கிறார்.


இப்போது எதற்கு அந்த வீடியோ என ரோகிணி கேட்கவும், தனக்கு அவசியம் உள்ளது அதை எடுத்து தந்தால் தான் அவனின் கதையை முடிப்பதாகவும் சொல்லுகின்றார். இதுதான் தற்போது வெளிய ப்ரோமோ.

எனவே இதன் மூலம் மீனா மீண்டும் பிரச்சனையும் சிக்க போகின்றார். இதை வைத்து விஜயா இன்னும் மீனாவையும் முத்துவையும் ஆட்டிப் படைக்க போகின்றார் என்பது மட்டும் தெரிகின்றது.

Advertisement

Advertisement