• May 18 2024

தயவுசெஞ்சு சீக்கிரமா முடிங்க, பாக்க முடியல"- டிஎன்ஏ டெஸ்டை எடுத்துடுறோம்- சீரியல் குறித்து வெண்பா கொடுத்த புதிய அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது.அதிலும் கொரோனாத் தொற்றுக் காலத்தில் லாக்டவுன் போடப்படிருந் வேளை அனைவரின் பொழுது போக்காகவும் சீரியல்களே காணப்பட்டன.

அதிலும் விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி மவுஸ் காணப்படுகின்றது.அதில் ஹிட்டாக ஓடும் முக்கிய சீரியல் தான் பாரதி கண்ணம்மா .இந்த சீரியல் இதுவரை 850 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது

பரபரப்பாக ஓடி டிஆர்பியில் முன்னணியில் இருந்து அந்த தொடர் தற்போது மோசமான ரெஸ்பான்ஸ் தான் அதிகம் பெற்று வருகிறது.இந்த சீரியலை எப்போ தான் முடிப்பீங்க என நெட்டிசன்களே தினமும் கேட்கும் அளவுக்கு சீரியல் சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில் வெண்பாவாக நடிக்கும் ஃபரினாவிடம் "BK சீரியல் எப்போ முடியும்.. தயவுசெஞ்சு சீக்கிரமா முடிங்க, பாக்க முடியல" என இன்ஸ்டாகிராமில் கேட்டிருக்கிறார். அதற்கு பதில் சொன்ன அவர் "சரிங்க.. புரியுது. அந்த டிஎன்ஏ டெஸ்டை எடுத்துடுறோம்" என கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement