• May 18 2024

மெலடியில் இருக்கும் இனிமை இன்றைய ரசிகர்களுக்குப் புரியவில்லை- கவலை தெரிவித்த எஸ்.பி.பி. சரண்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழர்களின் வாழ்வியலில் இரண்டென கலந்துள்ளது இசையும் பாடல்களும்.இவை சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருவதையும் காணலாம். மனிதர்களின் மகிழ்ச்சிக்கும் இசை ஒரு முக்கிய காரணமாக விளங்குகின்றது.

கறுப்பு வெள்ளை திரைப்படங்களில் இலக்கியப் பின்னணியில் காவியத்தன்மையோடு பாடல்கள் இடம்பெற்றன. கே.வி. மகாதேவன், எம்.எஸ்.வி - ராமமூர்த்தி என பல ஜாம்பவான்கள் இசையை முத்தாய்ப்பாக கடைந்தெடுப்பதில் வல்லவர்களாக இருந்தனர்.

இந்தப்போக்கு இளையராஜாவின் வருகைக்குப் பின்னர் முற்றிலும் மாறத் தொடங்கியது. மக்களின் மொழியில் அதாவது நாட்டுப்புற வடிவிலும், தெம்மாங்கு இசை பின்னணியிலும் ராஜா மக்களின் இசையை விருந்து படைத்தார்.

1992ல் ஏ.ஆர். ரஹ்மானின் வருகையைத் தொடர்ந்து இசையில் நவீனத்துவம் அதிகரித்துள்ளது.இவரைத் தவிர பரத்வாஜ், சிற்பி, டி. இமான் போன்றவர்கள் தனி ஆவர்த்தனங்களை தமிழ்த் திரையிசைக்கு வழங்கினர். அதேபோல் தேவா தனது கானா பாடல்கள், மெலடிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வந்தனர்.

ஆனால், தற்போது குத்துப் பாடல்கள் மட்டுமே அதிகமாக வெளியாவது ஒருவித சலிப்பை ஏற்படுத்துவதாக இசை ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ்.பி.பி. சரண் இதுகுறித்து கவலை தெரிவித்திருந்தார். மெலடியில் இருக்கும் இனிமை இன்றைய ரசிகர்களுக்குப் புரியவில்லை.

அதனால் நல்ல இசைக்கும், இசை கலைஞர்களுக்கும் பெரும் இழப்பு ஏற்படுவதாக தெரிவித்திருந்தார். அதேபோல் இப்போதெல்லாம் பாடல்களை எழுத கவிஞர்களோ பாடலாசிரியர்களோ தேவையில்லை என்ற நிலை வந்துவிட்டது. யார் வேண்டுமானாலும் எப்படியான வார்த்தைகளை போட்டும் அல்லது வார்த்தைகளே இல்லாமலும் பாடல்கள் எழுதலாம் என சினிமா கூறியுள்ளார்.

அதேநேரம் குத்துப் பாடல்களை ஒரேடியாக ஓரம் கட்டிவிடவும் முடியாது. சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்தமாக ஒன்றை புறக்கணிப்பது அறமும் இல்லை. சோகம், துக்கம், வலிகளை கடந்து ஒருவனை மீட்டெடுப்பதில் குத்துப் பாடல்களுக்கு இருக்கும் வலிமை வேறு எதற்கும் கிடையாது. ஆனாலும், அதற்கான அளவீடுகள் தற்போதைய தமிழ்த் திரையிசையில் இல்லையென்பதே உண்மை என்றும். குத்துப் பாடல்களுக்கு சமமாக மெலடிகளும் வெளியாக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement