• Sep 20 2024

மனைவியின் பிறந்தநாளில் பெரும் கொண்டாட்டம் தான்,ஆர்யா பகிர்ந்திருக்கும் புகைப்படம் !

Thisnugan / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் 'வனமகன்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சயீஷா அவரின் நடிப்பு மற்றும் நடனத்திறமைக்காக பெரிதும் பாரட்டப்பட்டார்.தொடர்ந்து தமிழில் பிஸியான நடிகையாக மாறினார் 'கடைக்குட்டி சிங்கம்','ஜுங்கா','கஜினிகாந்த்','காப்பான்','டெடி' என நீண்ட இவரது சினிமா வாழ்க்கை திருமணத்தின் பின் சற்று வேகம் குறைந்தது.

படம்

தமிழின் முண்ணனி நடிகர் ஆர்யாவுடன் இரண்டு படங்களில் நாயகியாக நடித்திருந்த சயீஷா தன் வாழ்க்கை துணையாக ஆர்யாவையே தேர்வு செய்துகொண்டார்.ரசிகர்கள் மற்றும் திரைத்துறையனரின் வாழ்த்துக்களோடு பிரம்மாண்டமாய் நடந்தேறியது ஆர்யா,சயீஷா  திருமண நிகழ்வு.

படம்

கடந்தாண்டு சிம்புவின் பாத்து தல திரைப்படத்தில் பாடல் ஒன்றில் சிறப்புத்தோற்றத்தில் தோன்றியிருக்கும் சயீஷா தற்போதுவரை திரைத்துறையில் ஓய்வில் இருக்கிறார்.இந்நிலையில் இன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடும் சயீஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கும் கணவர் ஆர்யா "என்னை மிகவும் நேசிக்கும் நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்ற காப்ஷனுடன் மனைவியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement