• Jan 19 2025

அது தறுதலை மாதிரி சுத்திட்டு இருக்கு..! முத்துவை கிரிமினல் என்று அசிங்கப்படுத்திய ஸ்ருதி! மீனா கொடுத்த கம்ப்ளைன்ட்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், டாக்டர் சத்யா விழுந்ததால் கை உடையல, யாரோ அவன் கைய புடிச்சு ஒடச்சி இருக்காங்க என சொல்ல, மீனா உன்ட  கையை யாரு உடைச்சது? என்ன நடந்தது? உண்மைய சொல்லு  என சத்யாவிடம் துருவி துருவி கேட்கிறார்.

அதற்கு சத்யா, மாமாட பிரண்ட் செல்வம் சிட்டிட்ட வட்டிக்கு வாங்கி இருந்தார். அதைக் கேட்பதற்கு போன டைம் செல்வம் காசு தரல. அந்த நேரத்துல கொஞ்சம் பிரச்சினையாகி, நீ எப்படி என்ட  பிரண்ட் மேல கைய வைக்கலாமென்று மாமா தான் என்னோட  கையோட உடைச்சாரு.. அப்படி என்று சத்யா சொல்லுகிறார். மேலும் அம்மா மேல சத்தியமா மாமா தான் என்னோட கைய உடைச்சாரு என்று சொல்கிறார்.

சொந்த பிள்ளை மாதிரி தானே பார்த்தோம், ஏன் இப்படி பண்ணிட்டாரு அப்படி என்று மீனாவின் அம்மா புலம்ப, மீனாவின் தங்கையும் அதனால் தான் மாமா ஹாஸ்பிடல் பக்கம் வரலையா? என்று கேட்க, மீனா கோபத்தில் செல்வத்தை பார்க்க செல்கிறார்.


அங்கு சென்ற மீனா, நீங்க சரி சொல்லி இருக்கலாம் தானே, என்கிட்ட ஏன் உண்மைய மறைச்சீங்க அப்படி என்று செல்வத்திடம் கேட்க, உண்மையை சொல்ல முடியாமல் சமாளித்த செல்வம், முத்து இங்க இல்லை, பக்கத்தில் போய் இருப்பதாகவும் சொல்கிறார்.

மீனா தொடர்ந்தும் செல்வத்திற்கு பேசிக்கொண்டு இருக்க, முத்து உள்ளே இருந்து வருகிறார். இதை பார்த்த மீனா, இப்படித்தான் எல்லா விஷயத்திலும் பொய் சொல்றீங்களா என செல்வத்திற்கு  பேசுகிறார்.

மேலும் குடிச்சிட்டு இருந்த முத்துவுக்கு, அன்னைக்கும் இதுபோலத்தான் என் தம்பிக்கு அடிக்கும் போதும்  குடிச்சிட்டு இருந்தீங்களா? இதுவரைக்கும் ரோட்டில் போறவங்கள தான்  அடிச்சிட்டு இருந்தீங்க. இப்ப என் தம்பி மேலேயே கை வச்சிட்டிங்க. அவன் படிக்கிற பிள்ளை பாவம் அப்படி என்று பேசிவிட்டு கோபமாக செல்கிறார். ஆனாலும் முத்து ஒன்றும் சொல்லவில்லை.

இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த மீனா, நடந்தவற்றை எல்லாம்  சொல்லி அழுது கொண்டிருக்கிறார். அவருக்கு ஸ்ருதி சற்று ஆறுதல் சொல்லுகிறார்

இதை அடுத்து வீட்டுக்கு வந்த முத்துவை, வீட்டார் அனைவரும் முன்னிலையில் நிக்க வச்சு அண்ணாமலை கேள்வி கேட்கிறார். ஆனாலும் நடந்தவற்றை சொல்ல முடியாமல் முத்து தவிக்கிறார்.

மேலும் அவன் தறுதலை போல சுத்திட்டு,  கண்டவனோட சேர்ந்தால தான் இப்படி, அவன்ட இன்னொரு கைய உடைக்க இல்ல என்று சந்தோஷப்படுங்கள் என்று சொல்லி, நடந்த விஷயத்தை அண்ணாமலையிடம் கம்ப்ளைன்ட்செய்த மீனாவையும் பார்த்து முறைக்கிறார் முத்து.

எனினும், எல்லாரும் முத்துவை பிழை சொல்ல, ஆமா நான் செய்தது  தப்பு தான். ஆனா அவனிடம் மன்னிப்பு கேட்க முடியாது. அப்படி என்று சொல்ல, அண்ணாமலை யோசிக்கிறார்.

இதற்கு இடையில் மனோஜ், மீனாவின் தம்பி ஏற்கனேவே பைக்  திருடினவன் தானே என்று சொல்ல, அவன் இப்போ திருந்திட்டான். வேலைக்கு போய் தான் சம்பாதிக்கிறான், உங்கள போல பார்க்கில போய் படுத்துட்டு வரல என சொல்லி பதிலடி கொடுக்கிறார்.

இறுதியாக ஏன் அப்பாட்ட சொன்னா? அப்படி என்று  முத்து மீனாவிடம் கேட்க, யார்ட்டயாவது சொல்லி அழணும் தானே, எங்க அம்மா கிட்ட சொல்ல முடியாது அப்படி என்று சொல்ல, அதற்கு அப்பாட்ட தான் சொல்லனுமா என்று முத்து கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Advertisement

Advertisement