• Nov 15 2025

கோபி கொடுத்த அடியில் பாக்கியாவுக்கு ஈஸ்வரி சொன்ன முடிவு? உண்மையை உளறிய செழியன்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரெஸ்டாரண்டில் நடந்த பிரச்சனைகளை பாக்கியா தனியா நின்று சமாளித்து விடுகின்றார். அதற்கு செழியன் தன்னை மன்னிக்குமாறு கேட்கிறார். ஆனாலும் அது எல்லாம் பரவாயில்லை என்று அவரை சமாதானம் செய்து அனுப்புகின்றார் பாக்கியா.

செழியன் போனதும் ஈஸ்வரி பாக்கியாவிடம் என்னதான் இருந்தாலும் அவன் ஒரு எட்டு வந்து பார்த்திருக்கணும். யாரையும் நம்பாதே.. உனக்கு என்று கொஞ்சம் காசை சேர்த்து வை என்று பாக்யாவுக்கு அட்வைஸ் பண்ணுகின்றார். நானும் இப்படித்தான் மகனை நம்பி இருந்தேன். ஆனா அவன் எனக்கு செய்யக்கூடாது  எல்லாம் செய்துவிட்டான் என்று சொல்லி புலம்புகின்றார்.

இதை தொடர்ந்து அடுத்த நாள் செழியன் வேலைக்கு கிளம்ப, கிச்சனுக்கு வந்த ஈஸ்வரி மீண்டும் திரும்பி ரூம்க்கு சென்று கதவை அடைத்து கொள்கின்றார்.  என்ன நடந்தது என்று செழியன், பாக்கியா கேட்க, நீ வேலைக்கு போ என்று சொல்லி அனுப்புகின்றார். அதன் பின்பு தனது முகத்தில் முழித்து விட்டு போக வேண்டாம் என்று பாக்யாவுக்கு சொல்லுகின்றார்.


இதை அடுத்து செழியன் எழிலை பார்த்து தனக்கு வேலை போன விஷயத்தை சொல்லி புலம்புகின்றார். எழிலும் செழியனுக்கு நம்பிக்கை கொடுக்கின்றார். இவர்கள் இருவரும் கதைத்துக் கொண்டிருப்பதை கோபி பார்த்து விடுகின்றார்.

அதன் பின்பு செழியன் கோபியின் கிச்சனுக்கு செல்ல, அங்கு எழிலுடன் என்ன கதைத்தாய் என்று கோபி கேட்கின்றார். அதற்கு எழில் பத்தியும் சொல்லுகின்றார் செழியன். மேலும் ஒரு கிழமைக்குள் செழியனுக்கு வேலை எடுத்து தருவதாகவும் கோபி வாக்கு கொடுக்கின்றார்


Advertisement

Advertisement