பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராதிகா கோபியை பார்க்கும்போது கோபி தனது வீட்டார்கள் பற்றியே பேசிக்கொண்டு உள்ளார்.. மேலும் தான் இங்கே கொஞ்ச நாள் இருந்து விட்டு வருவதாக சொல்ல, ஏன் அங்கு வந்தால் இருக்க முடியாதா? நாங்க உங்களை கவனிக்க மாட்டோமா? என்று ராதிகா கேட்கின்றார்.
ஆனாலும் நீ பிசியா இருப்பா இங்க எல்லாரும் என்ன விழுந்து விழுந்து கவனிக்கின்றார்கள். பாக்யாவும் எனக்கு சமைத்து போடுகின்றார் என்று சொல்லி ராதிகாவை அனுப்புகிறார். இதனால் ராதிகா போகும்போது பாக்கியாவை முறைத்து விட்டு செல்கின்றார்.
d_i_a
இதன் போது ஈஸ்வரி, கோபி இங்கே இருந்தால் சந்தோசமாக இருக்கின்றார். பாக்யாவும் அவரை கவனிக்கின்றார். நீ பேசாம கோபியை விவாகரத்து பண்ணிவிடு என்று ராதிகாவுக்கு சொல்லுகின்றார். ராதிகா பதில் எதுவும் பேசாமல் சென்று விடுகின்றார்.
இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த செழியன் தனக்கு வேலை கிடைத்து விட்டதாக கோபியிடம் ஆசிர்வாதம் வாங்குகின்றார். மேலும் இந்த விஷயத்தை அறிந்த ஈஸ்வரி ஏற்கனவே வேலைக்குப் போனியே.. அது என்ன ஆச்சு என்று கேட்க, செழியன் நடந்தவற்றை சொல்லுகின்றார். அதன் பின்பு கோபி தனது அம்மா, பிள்ளைகளுடன் சிரித்து பேச இதனை பாக்கியா கவனித்துக் கொண்டிருக்கின்றார்.
இறுதியாக கோபியை அழைத்து பிளாக் காபி கொடுக்க, நீ பிளாக் காபி போடுவதில் ஸ்பெஷலிஸ்ட் என்று புகழ்ந்து தள்ளுகின்றார். ஆனாலும் பாக்கியா நீங்க எப்ப ராதிகா வீட்டுக்கு போக போறீங்க? அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருக்கப் போறீங்களா? என்று பதிலடி கொடுக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!