• Sep 07 2024

மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குநருடன் இணைகிறாரா விக்ரம்? ஆனாலும் ட்விஸ்ட் இருக்கு..

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் தற்போது நடித்துள்ள படம் தான் தங்கலான். இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார்.

தங்கலான் படத்தில் நடிகர் விக்ரமுடன் மாளவிகா மோகன், பசுபதி, பார்வதி தெருவோத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆவதற்கு தயாராகியுள்ளது.

இந்தப் படத்தின் ப்ரமோஷன்காக கேரளா சென்ற விக்ரம்  பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார். இதன்போது மலையாள இயக்குனர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


அதாவது இந்த ஆண்டு ஹிட் படம் கொடுக்க மலையாள இயக்குனர் ஒருவருடன் ஒரு படத்திற்கான கதை விவாதம் நடந்து வருகிறது. இது குறித்த கூடுதல் தகவல் எதுவும் என்னால் இப்போது சொல்ல முடியாது. இது நடக்கலாம் நடக்காமலும் போகலாம் என்று விக்ரம் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த ஆண்டு ஹிட் படம் கொடுத்தவர்கள் என்றபோது மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை இயக்கிய இயக்குனர் சிதம்பரம் தான் அனைவரது நினைவுக்கும் வருகின்றார்.

மஞ்சுமெல் பாய்ஸ் படம் வெற்றி பெற்ற போது நடிகர் விக்ரமிடம் சிதம்பரம் கதை ஒன்று சொல்லியிருப்பதாகவும், இது குறித்த விவாதம் நடைபெறுவதாகவும் தகவல் வெளியானது.

தற்போது விக்ரம் பத்திரிகையாளரிடம் கூறியுள்ளதும் முன்பே வெளியான தகவல் ஒத்துப் போவதால் விக்ரம் மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனருடன் இணைவது கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement