• Jan 19 2025

'வணங்கான்' பாலாவின் பிரமாண்டமான Come Back... படத்தின் தயாரிப்பாளர் புகழாரம்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதை அம்சங்களை கச்சிதமாக எடுக்கும் இயக்குனர்களுள் ஒருவர் தான் பாலா. தற்போது இவருடைய இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகின்றார் அருண் விஜய்.

இந்தப் படத்தில் ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

சமீபத்தின் வணங்கான் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வழக்கமாக பாலா கதைகளில் வரும் ஹீரோ எப்படி இருப்பாரு அதே போல ஒரு சீரியஸான கேரக்டர் அருண் விஜய்க்கு காணப்படுகின்றது.


மேலும் ஒரு கையில் பெரியார் சிலையும் மறுக்கையில் விநாயகரையும் அருண் விஜய் ஏந்தி கொண்டிருக்கும் முதல் பார்வையே ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றது.

இந்த நிலையில், வணங்கான் படத்தை பார்த்துவிட்டு அதை பாராட்ட வார்த்தைகளே இல்லையென்றும், இது இயக்குநர் பாலாவின் பிரமாண்டமான Come Back என்றும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement