தமிழக முதல்வராக விஜய் தற்போது சிறப்பாக பணியாற்றி வருகின்றார். இவர் சினிமாவில் இருக்கும் போதே அரசியலில் நுழைவதற்காக பல ஆயத்த வேலைகளில் ஈடுபட்டிருந்தார். மக்களும் இவருக்கு பெருமளவில் ஆதரவு தெரிவித்தனர்.
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை 2024 ஆம் ஆண்டு நிறுவினார். ஆனால் இந்த ஆண்டு இடம்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என அப்போதே குறிக்கோளாக கொண்டிருந்தார். அதன்படியே இந்த ஆண்டு இடம்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில், சுமார் இரண்டு ஆண்டுகளிலேயே முதலமைச்சராக ஆட்சியைப் பிடித்தது பலருக்கும் அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. இதனை தமிழக மக்கள் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் வாழும் விஜய் ரசிகர்களும் தமிழ் மக்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக முதல்வர் விஜய் பேச வேண்டும் என்று இலங்கையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

அதன்படி அவர் கூறுகையில், “முதலில் விஜயை சந்திப்பேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்கும் தருணத்தை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் அதனைப் பார்க்க முடியவில்லை. தமிழ்நாட்டு மக்கள் வரலாறு காணாத மாற்றத்திற்காக வாக்களித்திருக்கின்றார்கள்.
இது நடக்காது என பெரிய அரசியல்வாதிகள் கூறினார்கள். ஆனாலும் நான் நடக்கும் என்று கூறினேன். எங்களுடைய இனம் அழியும் போது ஏனைய அரசுகள் வேடிக்கை தான் பார்த்தன. தமிழர்களுக்கு ஆதரவாக விஜய் தான் பேச வேண்டும். சீமான் வாக்கு வாங்க மட்டுமே பேசினார். விஜயின் சேவை தான் தமிழ் மக்களுக்கு தேவை” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது அவருடைய இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!