விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த LIK திரைப்படம் கடந்த பத்தாம் திகதி ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் சீமான், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்தப் படம் ரிலீசுக்கு தயாராக இருந்தபோதும், இதன் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளிப்போடப்பட்டது. ஒரு கட்டத்தில் இந்தப் படம் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு வந்துவிட்டது. ஆனால் இறுதியாக இந்தப் படம் ரிலீசுக்கு வந்தது.
எனினும் ஆர்வத்துடன் பார்க்கச் சென்றவர்களை படம் முழுவதும் திருப்திப்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்தப் படத்தின் கதைக்களம் மிகவும் புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருந்தாலும், ஒரு சில இடங்களில் விக்கி சோர்ந்துவிட்டார் என்று பலர் கூறியுள்ளனர்.

எனினும் இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பும் ஸ்டைலும் நன்றாகவே இருந்துள்ளதாம். பிரதீப் நடித்த படங்கள் இலகுவில் 100 கோடியை அள்ளியிருந்தது. ஆனால் இந்தப் படத்திற்கு அப்படி ரெஸ்பான்ஸ் கிடைப்பது சந்தேகமாகக் காணப்படுகிறது.
இந்த நிலையில், படம் வெளியான இரண்டாவது நாளில் வசூல் விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தப் படம் தமிழில் ரூ.6.20 கோடியும், தெலுங்கில் ரூ.1.50 கோடியும், மொத்தத்தில் ரூ.7.70 கோடியும் வசூலித்துள்ளது. முதல் நாளில் ரூ.7.05 கோடி வசூலை தொட்ட இந்தப் படம், இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.15 கோடி வரை வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!