• Apr 15 2026

8 கோடி மக்கள் என் பின்னாடி இருக்காங்க.. திவாகர் சொன்னது என்ன.? அவரே வெளியிட்ட வீடியோ இதோ

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் "வாட்டர் மெலன்   ஸ்டார்" என அழைக்கப்படும் திவாகர். இவர் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகக் காணப்பட்டார்.

இதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் சென்ற திவாகருக்கு ஆரம்பத்தில் நெகட்டிவ் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் நாளடைவில் அவருடைய உண்மையான குணத்தைப் பார்த்து பலரும் அவருக்கு ரசிகர்களாக மாறினர். ஆனாலும் அதை அவர் காப்பாற்றிக்கொள்ளவில்லை.

அதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த திவாகர், மீண்டும் ரீல்ஸ் வெளியிடுவது, பிரபல நடிகர்களுடன் புகைப்படம் எடுப்பது மற்றும் படங்களில் கமிட் ஆகியிருப்பதாகவும் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வந்தார்.


இவ்வாறான நிலையில், நேற்றைய தினம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்துகொண்டவர்களுள் முக்கியமாக மாகாபா ஆனந்த், கானா வினோத், புகழ் ஆகியோர் தன்னைத் தாக்கினார்கள் என அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்தார். மேலும் இது தொடர்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட வீடியோவில், "எங்க குக் வித் கோமாளிக்கு நான் வந்துருவேனோ என்ற பொறாமையில்தான் இப்படி பண்றாங்க. நான் பிக் பாஸ் போக முதலே 5 படங்களில் நடித்தேன். அவங்களுக்கு யாராவது ஒருத்தர் புதுசா வந்தாலே பொறுக்காது, அவ்வளவு வயித்தெரிச்சல். அதனால்தான் குரேஷி வரவில்லை. எனக்கு பின்னாடி 8 கோடி மக்கள் இருக்காங்க, கடவுள் இருக்கார்" என்று தன்னுடைய மனக்குமுறலை தெரிவித்துள்ளார். தற்போது அவருடைய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு, பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement