• Apr 15 2026

ஜனநாயகன் லீக் விவகாரத்தில் குற்றவாளி இவர் தான்.? உண்மையை அம்பலப்படுத்திய அமீர்

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

எச். வினோத் — விஜய் கூட்டணியில் உருவான படம்தான் ஜனநாயகன். இந்தப் படம் விஜய் நடிக்கும் இறுதிப் படமாகக் காணப்பட்டது. இந்தத் திரைப்படம் தற்போது இணையத்தில் லீக் ஆகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பில் பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஒட்டுமொத்த சினிமா துறையும் ஜனநாயகன் படம் இணையத்தில் லீக் ஆனதை முன்னிட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளது. முதலில் ஐந்து நிமிட காட்சிகள் மட்டுமே வெளியாகின. ஆனால் அதற்குப் பின்பு சில மணி நேரத்தில் முழுப் படமும் லீக் ஆகிவிட்டது.

ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி ரிலீசாக இருந்தது. ஆனால் இந்தப் படத்தின் சென்சார் பிரச்சனையால் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. தற்போது சென்சாரில் இருக்கும் ஒரு படம் இணையத்தில் லீக் ஆவது அரிதிலும் அரிதான விடயமாகப் பார்க்கப்படுகிறது.


பலரும் எழுப்பும் கேள்வி இந்தப் படத்தை யார் லீக் செய்திருப்பார்கள் என்பதுதான். வெளியான வீடியோவில் "edit-ref" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது எடிட்டிங் காப்பி என்பதாகும். அந்தக் காப்பி முக்கியமாக இயக்குநர், தயாரிப்பாளர், எடிட்டர் மற்றும் நடிகர் ஆகிய நான்கு பேரிடம் மட்டுமே காணப்படும். எனவே இந்த விஷயம் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், ஜனநாயகன் படம் லீக் ஆனது தொடர்பில் பிரபல நடிகரும் இயக்குநருமான அமீர் பதில் கொடுத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், "படத்தைப் பார்ப்பவரை விட, முதலில் வெளியே பகிர்ந்தவன்தான் குற்றவாளி. சென்சார் காப்பியிலிருந்து பகிரப்பட்டிருந்தால் 'censor copy' என்ற வாட்டர்மார்க் இருக்கும். ஆனால் லீக் செய்யப்பட்ட வீடியோவில் 'edit-ref' என்று இருந்தது. 'edit-ref' என்று இருந்தால் அது பட குழுவில் இருக்கும் எடிட்டரைச் சேரும். அந்த எடிட்டர்தான் குற்றவாளி" என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement