• Jun 21 2026

பிள்ளைகளுக்காக சினிமாவை விடுகிறாரா விக்கி? – நிம்மதியான வாழ்க்கைக்கு விக்னேஷ் ஸ்கெட்ச்!

shali / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் பகிர்ந்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. வாழ்க்கையை எளிமையாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்ற தனது எண்ணத்தை அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.


“ஒரு 300 முதல் 350 கோடி ரூபாய் வரை சம்பாதித்து அதை எஃப்டியில் முதலீடு செய்துவிட்டால், 7 சதவீத வட்டியில் ஆண்டுக்கு சுமார் 21 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். அதாவது மாதத்திற்கு ஒன்றரை கோடி, ஒரு நாளைக்கு சுமார் 30 லட்சம் ரூபாய் வருமானம் வரும். அதன் பிறகு பணம் பற்றிய கவலை இல்லாமல் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியும்,” என அவர் கூறியுள்ளார்.

இந்த கருத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாமல், அதை சரியாக நிர்வகித்து வாழ்க்கையை சமநிலையுடன் நடத்துவது முக்கியம் என்பதையும் விக்னேஷ் சிவன் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக தனது பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிட்டு அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற அவரது ஆசை பலரையும் கவர்ந்துள்ளது.

நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவன் பகிர்ந்த இந்த எண்ணம், ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. பணம், குடும்பம், வாழ்க்கை சமநிலை குறித்து அவரது பார்வை தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement