நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்-2’ படமும் அதேபோன்ற சிக்கலில் சிக்கியுள்ளது.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளது. இந்த காட்சி விரைவாக பரவி ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக விளக்கம் வெளியிட்டுள்ளது. அதில், ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ அனுமதியின்றி வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது சட்டவிரோதமான செயல் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த காட்சிகளை பகிரும் அல்லது பரப்பும் சமூக வலைத்தள கணக்குகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்களின் காட்சிகள் முன்கூட்டியே கசிவது, படக்குழுவின் உழைப்பையும் எதிர்பார்ப்பையும் பாதிக்கும் முக்கிய பிரச்சனையாகும். இதனால் ரசிகர்களும் இப்படிப்பட்ட கசிந்த காட்சிகளை பகிராமல் இருக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. இந்த சம்பவம் தற்போது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!