• Apr 15 2026

செட்டில் நடந்த கொடூரம்! போதையில் மாகாபா செய்த காரியம்? பொலீஸ் கம்பிளைன்ட் கொடுத்த திவாகர்

shali / 3 days ago

Advertisement

Listen News!

பிரபல சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியில், சமீபத்தில் நடந்ததாக கூறப்படும் ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த வார எபிசோட் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது, கானா வினோத், புகழ் மற்றும் மாகாபா ஆனந்த் ஆகியோர் இணைந்து வாட்டர் மெலன் திவாகரை தாக்கியதாக முதலில் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. ஆனால், அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லாததால் பலர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில், வாட்டர் மெலன் திவாகர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இந்த விவகாரத்தை தீவிரமாக்கியுள்ளது. அந்த வீடியோவில், “கானா வினோத், புகழ் மற்றும் மாகாபா ஆனந்த் தகாத வார்த்தைகளில் பேசினர். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தபோது, மூவரும் இணைந்து என்னை தாக்கினர்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், “மாகாபா ஆனந்த் போதையில் இரும்பு ராட் கொண்டு தாக்கினார்” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், மூவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொத்தத்தில், இந்த சம்பவம் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை சுற்றி பெரிய சர்ச்சையை உருவாக்கி, ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement