மலையாள நடிகையான ஐஸ்வர்யா, தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக காணப்படுகின்றார். இவர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இடைத்தொடர்ந்து தனுசு உடன் ஜெகமே தந்திரம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பின் மணிரத்தினம் இயக்கத்தின் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
d_i_a
மேலும் கட்டா குஸ்தி, கிங் ஆப் கொத்தா, பொன் ஒன்று கண்டேன் போன்ற படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை தக்க வைத்துள்ளார். தற்போது ஐஸ்வர்யாவின் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு காணப்படுகின்றன.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா, அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். மேலும் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் தக்லைப் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வரும் நிலையில், கீர்த்தி சுரேஷும் ஐஸ்வர்யாவின் புகைப்படங்களுக்கு ஹார்ட் கொடுத்துள்ளார். தற்பொழுது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.
Listen News!