தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் பாலையா சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவராக காணப்படுகிறார். பொது இடங்களில் இவர் செய்யும் சேட்டைகள் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்துகின்றன.
பாலையாவின் படங்கள் இணையதள பக்கங்களில் மீம்ஸ் மெட்டீரியல் ஆகவே வைரலாகி வருகின்றன. அதிலும் அவர் படங்களில் ஆடும் ஆட்டம், ஆக்சன் காட்சிகள் என்பன எப்போதும் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்படும்.
d_i_a
சமீபத்தில் அவர் ஆடிய நடனம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. டக்கு மகாராஜ் என்ற படத்தில் நடித்துள்ள பாலையா இந்த படத்தின் பாடல் ஒன்றில் பெண் நடிகை பின்னால் தட்டி தட்டி டான்ஸ் ஆடி இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
குறித்த பாடலுக்கு மகளிர் சங்கம் கூட கொதித்தெழுந்தது. அதில் அவர் ஹீரோயினை கண்டபடி அடிப்பது போல டான்ஸ் மூவ்மெண்ட் செய்துள்ளார் அதை பார்ப்பதற்கு பாடல் காட்சியா இல்லை சண்டைக்காட்சியா என்று தான் தோன்றும்.
மேலும் 64 வயதாகும் பாலையாவுக்கு இது தேவையா? தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக காணப்படும் ரஜினிகாந்த் கூட தனது வயதிற்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அந்த பக்குவம் கூட பாலையாவுக்கு இல்லையா என்ற கண்டன குரல்களும் எழுந்தன.
இந்த நிலையில் தற்போது பாலையாவின் மற்றும் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. அதில் நடிகையின் அருகில் இருக்கும் பாலையா அவருக்கு மாஸ் காட்டும் விதத்தில் தனது போனை சுழற்றி எரிகின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி கடும் ட்ரோலுக்கு உள்ளாகி வருகின்றது.
Balayya Masss!!!!pic.twitter.com/HVSw4eolva
Listen News!