• Jan 11 2025

முதல் 10 இடங்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ள அஜித் ரேஸிங் டீம்...எத்தனையாவது தெரியுமா..?

Mathumitha / 3 hours ago

Advertisement

Listen News!

சிறு வயதிலிருந்து கார் ரேஸிங்கை தனது பேஷனாக கொண்டுள்ள நடிகர் அஜித் சினிமாவை தாண்டிய காதல் கார் ரேசிங்கில் வைத்துள்ளார்.தற்போது இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ள இவர் தொடர்ந்து வருடத்திற்கு ஒரு படத்தில் மாத்திரம் நடிக்கவுள்ளதாகவும் கார் பந்தயங்களில் மாத்திரம் முழு கவனத்தையும் செலுத்த உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.


அது மட்டுமல்லாமல் நேற்று முன் தினம் இவர் கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கியிருந்தார்.அவர் மிகவும் அவதானமாக தலைக்கவசம் அணிந்திருந்தமையினால் விபத்தில் காயம் இன்றி உயிர் தப்பினார்.தனது ஒவ்வொரு செயலிலும் மிகவும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் இவர் தற்போது துபாயில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.


இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது துபாயில் நடைபெறும் 24H Dubai 2025 ரேஸில் பங்கேற்றுள்ளார். 

அஜித் குமார் ரேஸிங் என்ற அவரது டீம் இந்த போட்டியில் கலந்துகொண்டு வருகின்றது.இன்று நடைபெற்ற Qualification round முடிந்து அஜித் குமார் ரேஸிங் டீம் 7வது இடத்தை பிடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது .

முழு முடிவுகள் இதோ..


Advertisement

Advertisement