தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்றைய தினம் விசாலை கிராமத்தில் நடைபெற உள்ளது. இதற்காக பல ஏற்பாடுகளையும் தவெக தொண்டர்கள் பார்த்து பார்த்து செய்துள்ளார்கள்.
கடந்த மாதத்திலேயே தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு அது குறைவான நேரத்தின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இந்த மாநாடு நடப்பு மாதத்திற்குள் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் இடத்தில் தொண்டர்கள் அமர வைக்கப்பட்டுள்ள பகுதியில் விஜய் நடந்து வருவதற்காகவே தனி பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. மழை பெய்தாலும் திடலுக்குள் மழை நீர் உள்ளே வராமல் இருக்க தரையின் அடி சுமார் 3 அடி வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன் விஜய் ஏற்றவுள்ள கொடியின் கொடிக் கம்பம் 101 அடியை கொண்டதாகவும் 20 அடி உயரம், 30 அடி அகலம் அளவில் கொடி காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கொடிக் கம்பத்தின் உச்சியில் இடிதாங்கியும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தவெக மாநாட்டிற்கு அனைத்தும் பார்த்துப் பார்த்து செய்யப்பட்ட போதிலும் அங்கு வந்த தொண்டர்கள் கழிப்பிட தண்ணீரை குடிக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதேவேளை, குறித்த இடத்தில் வெயில் தாங்க முடியாமல் 80ம்ம் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
Listen News!