நடிகை கமலா காமேஷ் காலமாகிவிட்டார் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி, பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், குறித்த செய்தி வதந்தி என அவரின் மகள் உமா ரியாஸ் கான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைத்துறையில் 80-களில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் கமலா காமேஷ் இசையமைப்பாளர் காமேஷை திருமணம் செய்து கொண்ட இவருக்கு . உமா ரியாஸ் என்ற மகள் உள்ளார். இவர் தற்போது கயல் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் காலையில் இருந்து இவரின் தாயார் மறைந்து விட்டதாக வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் எனது மாமியாரும் எனது கணவர் ரியாஸ் கானின் தாயுமான ரஷீதா பானுதான் உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார்".
மேலும் "அவர் என்னுடன் சென்னையில் உள்ள வீட்டிலிருந்தார். வயோதிக காரணமாக மறைந்தார். அவருக்கு 72 வயதாகிறது. ஆனால் என்னுடைய தாய் கமலா காமேஷ் மறந்தார் என்று வந்த செய்தி வதந்தி" என உமா ரியாஸ் தெரிவித்துள்ளார்.
Listen News!