• Jul 12 2026

பிச்சைக்காரன் கூட்டணியின் மேஜிக் மிஸ்ஸா? 2ம் நாளே வசூலில் தடுமாறும் ‘நூறு சாமி’..

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

‘பிச்சைக்காரன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ள படம் தான் ‘நூறு சாமி’. தன்னுடைய இரண்டு மகன்களை தனியாக வளர்க்கும் தாய் செல்வியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு படம் நகர்கிறது. வளர்ந்த பிறகு இரு சகோதரர்களும் வெவ்வேறு பாதைகளில் பயணித்தாலும், அவர்களுக்குள் நீண்டகால போட்டி மனப்பான்மை தொடர்கிறது.

இதற்கிடையில், படத்தின் விமர்சனங்களும் கவனம் பெற்று வருகின்றன. வழக்கமான கிராமத்து கதைகளில் இடம்பெறும் அதிகப்படியான மெலோடிராமா மற்றும் பழிவாங்கும் காட்சிகளை தவிர்த்து, வித்தியாசமான அணுகுமுறையை இயக்குநர் சசி கையாள்ந்துள்ளதாக விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.

இந்த நிலையில், நூறு சாமி திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி இரண்டாவது நாளில் வசூலில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.


பாக்ஸ் ஆபிஸ் கணக்குகளின்படி, முதல் நாளில் ரூ.75 லட்சம் நிகர வசூல் செய்த இப்படம், இரண்டாவது நாளான சனிக்கிழமையில் ரூ.1.22 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் முதல் நாளை ஒப்பிடும்போது சுமார் 62.7 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதுவரை இரண்டு நாட்களில் ‘நூறு சாமி’ திரைப்படம் இந்தியாவில் ரூ.1.97 கோடி நிகர வசூலையும், ரூ.2.26 கோடி மொத்த வசூலையும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சனிக்கிழமையன்று மட்டும் 1,042 காட்சிகளில் திரையிடப்பட்ட இப்படத்திற்கு, காலை காட்சிகளில் குறைவாக இருந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை, பிற்பகல் மற்றும் இரவுக் காட்சிகளில் கணிசமாக உயர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் நாளில் சுமாரான தொடக்கத்தைப் பெற்ற ‘நூறு சாமி’, இரண்டாவது நாளில் வசூலில் வேகம் பிடித்திருப்பது படக்குழுவிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement