தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழும் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தனுஷ் கைவசம் பல படங்கள் காணப்படுகின்றன. அவர் படப்பிடிப்புகளில் பிஸியாக காணப்படுகிறார். ஆனாலும் அவரைச் சுற்றிய கிசுகிசு தகவல்கள் வலம் வருவது வழக்கமாகவே காணப்படுகிறது.
அதன்படி, ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ் விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியானது. அதற்காக அவருடைய உறவுக்கார பெண் ஒருவர் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனாலும் அதற்குப் பிறகு அவர் உண்மையிலேயே மிருணாள் தாகூரை காதலிக்கிறார், அவர்கள் அடிக்கடி டேட்டிங் செல்கிறார்கள் என்ற தகவலும் கசிந்தது.

இது தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோர் மௌனம் காத்தனர். எனினும் ஒரு கட்டத்தில் மிருணாள் தாகூர், "அது எல்லாம் உண்மை இல்லை, எல்லாம் வதந்தி" என தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.
மேலும், "தனுஷை எனக்குப் பிடிக்கும். அவருடன் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் நானும் அவரும் காதலிக்கிறோம் என்பது உண்மை இல்லை. வேண்டுமென்றே இந்த வதந்திகளை பரப்புகிறார்கள்" என்பது போல் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தனுஷ் - மிருணாள் தாகூர் பற்றிய மற்றொரு தகவல் கசிந்து வருகிறது. அதாவது, அவர்கள் இருவரும் தங்களுடைய உறவை பிரேக் அப் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, "இனிமேல் எங்களுடைய உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம்" என்ற முடிவெடுத்து இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!