• Apr 26 2024

நடிகர் பிரபுவின் மகள் தற்போது இப்படியொரு தொழில் செய்கின்றாரா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத மூத்த நடிகராக இருந்தவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரது மகன் தான் நடிகர் பிரபு. இவர் 80களில் டாப் நடிகராக இருந்து வந்ததோடு பல பிளாக் பஸ்டர் படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துள்ளார்.

இந்த நிலையில் தற்பொழுது பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றார். அந்த வகையில் பிரமாண்ட இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்திற்காக அவர் உடல் எடை குறைந்துள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது. இந்த நிலையில் இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னரே 1982 ஆம் ஆண்டு புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஐஸ்வர்யா பிரபு என்ற மகளும், விக்ரம் பிரபு என்ற மகனும் உள்ளார். மேலும் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார்

இவருடைய மகளுக்கு அவருடைய 2009ஆம் ஆண்டு அத்தை மகன் குணால் என்பவருடன் திருமணம் நடந்தது.இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் பிரபு மகள் ஐஸ்வர்யா கேக் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது.

மெல்ட்ஸ் டெசர்ட் (meltz.dessertz) என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ள ஐஸ்வர்யா, ஆர்டரின் பேரில் கேக் தயாரித்து வாடிக்கையாளர்கள் வழங்கி வருகிறார்.

மேலும் இதற்காக அவர் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம் ஆரம்பித்து தான் தயாரித்த விதவிதமான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அவர் தயாரித்த கேக்களின் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.அத்தோடு பிறந்த நாள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக அவர் கேக் தயாரித்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement