• May 04 2024

நயன்-விக்கியின் திருமண வீடியோ ஓடிடியில் எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 7 ஆண்டுகளுக்கு மேலாக காதல் ஜோடியாக இருந்து கடந்த மாதம் 9ம் திகதி திருமண பந்தத்தில் இணைந்த கொண்டவர்கள் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.

மேலும் இந்த திருமணத்துக்குப் பத்திரிக்கையாளர்கள் அழைக்கப்படவில்லை. அதுபோல கலந்துகொண்ட பிரபலங்களுக்கும் செல்போன் அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் நயன்தாரா திருமண வீடியோ முன்னணி ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக ஓடிடி தளம் ஒன்று 25 கோடி ரூபாய் வரை நயன்தாரா தம்பதிகளுக்கு கொடுத்ததாக தகவல்கள் பரவின. ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் திருமணம் முடிந்து ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்ட நிலையில் இதுவரை அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் ரசிகர்களும் இப்போது அந்த வீடியோ குறித்து முன்பு இருந்த எதிர்பார்ப்பில் இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு தகவலின் படி, சம்மந்தப்பட்ட ஓடிடி நிறுவனம் இப்போது தங்கள் முடிவில் இருந்து பின் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஓடிடியில் திருமண வீடியோ வெளியாக வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement