• Apr 19 2026

கொடுத்து வச்ச குழந்தை... மகாராணிக்கு விஜய் டிவி புகழ் செய்த காரியம்! குவியும் பாராட்டுக்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

'கலக்க போவது யாரு' என்ற விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலம் காமெடியனாக அறிமுகமானவர் தான் நடிகர் புகழ்.

இவரின் விடாமுயற்சி காரணமாக சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

குக் வித் கோமாளி ஷோவில் காமெடியனாக பாப்புலர் ஆனவர் புகழ். அவர் பல படங்களிலும் தற்போது காமெடியனாக நடித்து வருகிறார். 


இவ்வாறு மிஸ்டர் zoo கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். மேலும் டைமன்ட் டோனி என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார் புகழ். இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

அதாவது, விஜய் டிவி புகழுக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது தனது குழந்தையுடன் முதன் முறையாக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் இப்பவே குழந்தைக்கு வெளிநாட்ட காட்டுறாங்களே என்று பாராட்டி வருகிறார்கள் .


Advertisement

Advertisement