• Jan 19 2025

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை கர்ப்பமா? ஆனா இறுதியில் சொன்ன ஷாக் நியூஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் நாயகியாக நடிகை நக்ஷத்ரா நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

வானவில், சன் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தொடர்ந்து தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் சில தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும். குறும்படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

நடிகை நக்ஷத்ரா சீரியல்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சேட்டை, வாயை மூடி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை நக்ஷத்ரா நாகேஷ் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என வயிற்றை தொட்டு காட்டி ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

ஆனாலும், இது சீரியலில் மட்டும் தான் நிஜத்தில் அல்ல என்ற தகவலையும் சேர்த்து இருக்கிறார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். மேலே உள்ள தகவலை படித்ததும், கீழே கொடுத்த விளக்கத்தை படிக்காமலேயே ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை குவிக்க தொடங்கிவிட்டனர்.

ஆனாலும் கடைசியில் நிஜத்தில் தான் கர்ப்பமாக இல்லை என்று இவர் கூறியிருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருப்பதாகவும் சீக்கிரமாக குட் நியூஸ் சொல்ல வேண்டும் என்றும் பலர் கமெண்ட்களை குவிக்கிறார்கள்.

Advertisement

Advertisement