• Dec 03 2024

புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவிகரம் நீட்டிய லேடி சூப்பர் ஸ்டார்... மகிழ்ச்சியில் மக்கள்... நயன் என்ன செய்தார் தெரியுமா?

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல பிரபலங்கள் முன் வந்தனர் . அந்த பட்டியலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களும் தற்போது உதவிக்கரம் நீட்டியுள்ளார். இந்த உதவி நடிகையின் புதிய பிராண்ட் மூலம் அனுப்பப்பட்டது மற்றும் அதே வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

நயன்தாராவின் புதிய காஸ்மெட்டிக் பிராண்ட் 'ஃபெமி9' சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்போது, ​​கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி மக்களுக்கு அவரது நிறுவனம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. இந்த முயற்சியில் சிக்கித் தவிக்கும் சென்னை குடிமக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. மக்களுக்கு பெரும் உதவியாக இருந்த சானிட்டரி நாப்கின்களையும் வழங்கினர்.

இன்ஸ்டாகிராமில், பிராண்ட் வேளச்சேரியில் தங்கள் நிவாரணப் பணிகளின் வீடியோவை வெளியிட்டு, வெள்ள நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறோம். ஒன்றாக, நாங்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறோம் என விடீயோவை பகிர்ந்துள்ளர்.

Advertisement

Advertisement