• Jun 11 2026

மன அழுத்தமா காரணம்.? பாரதிராஜா மரணம் குறித்து அதிர்ச்சி விளக்கம் கொடுத்த மருத்துவர்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா நேற்றைய தினம் காலமானார். இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் பலர் இன்றளவில் மட்டும் இந்த செய்தியை நம்ப மறுத்து வருகின்றனர். 

இந்த நிலையில், தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநர் பாரதிராஜா மறைவு குறித்து பிரபல மருத்துவர் ஒருவர் அளித்த விரிவான கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

அதன்படி அவர் கூறுகையில், பாரதிராஜா கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு மற்றும் மன அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். மனோஜ் அவர்களின் மறைவு அவரை மிகுந்த அளவில் பாதித்தது. அதற்குப் பிறகு அவர் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.


மேலும், மன அழுத்தம், டிப்ரஷன், ஆன்சைட்டி போன்றவை உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தும். இது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். குறிப்பாக வயதானவர்களில் இத்தகைய மன அழுத்தம் மிக ஆபத்தானது  என்று விளக்கினார்.

அவர் மேலும்,  எந்தவொரு பெரிய இழப்பையும் மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியாதபோது அது உடல்நலத்தையும் பாதிக்கலாம். அதனால் மன அமைதி மிகவும் அவசியம்  என்றும் கூறினார்.

பாரதிராஜா குறித்து பேசிய அவர், அவர் மிகச் சிறந்த மனிதர். தன்னுடைய பணிகளில் முழுமையாக ஈடுபட்டவர். பலரை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர். அவரின் மறைவு திரையுலகிற்கு பெரிய இழப்பு எனவும் உருக்கமாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement