• Apr 17 2026

இன்றொரு நாள் போதுமா.? காதலர் தினத்தில் கமல்ஹாசன் பகிர்ந்த ஆழமான கருத்து

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் காதலர்களுக்கு ஒரு “ஸ்பெஷல்” நாளாகவும், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொருவரும் இந்த நாளை பல எதிர்பார்ப்புகளுடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்காக காதலர் தின வாழ்த்து பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,

"ஒருவர் பால் ஒருவர் கொள்ளும் காதல் தொடரவும், அனைத்தின் பால் காதல் வளரவும் வாழ்த்துகள். அன்பு காதலாக காதல் அன்பாக மாறவும் வாழ்த்துகள். இவை அனைத்தும் செய்ய இன்றொரு நாள் போதுமா?" என பதிவிட்டுள்ளார்.


கமலின் இந்த கருத்து காதல் உணர்வு ஒரு நாள் மட்டும் கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல, தினந்தோறும் வளர்த்துக் கொள்ள வேண்டியது என்பதைக் குறிப்பிடுகிறது. 

சமூக வலைதளங்களில் அவரது பதிவை ரசிகர்கள் பகிர்ந்து, அதில் உள்ள ஆழமான கருத்தை மிகவும் விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும், உலகம் முழுவதும் காதலர் தினத்தை இன்று  கொண்டாடினாலும், கமல்ஹாசனின் கருத்து காதல் என்ற உணர்வு எப்போதும் உயிரோட்டமானதாக இருக்க வேண்டியதையும் நினைவுபடுத்தி உள்ளது.

Advertisement

Advertisement