• Apr 17 2026

என்னது பூர்ணிமா வெளியேற்றமா? அர்ச்சனாவுக்கு அதிகரிக்கும் மக்கள் ஆதரவு! வெளியான ஓட்டிங் லிஸ்ட்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி  தற்போது பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இம்முறை பிக் பாஸ் டைட்டிலை வின் பண்ண போவது யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நிக்சன், ரவீனா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார்கள். அதைத்தொடர்ந்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் விஷ்ணுவை தவிர அனைவருமே நாமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இன்றைய தினம் வைக்கப்பட்ட பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு விசித்திரா வெளியேறியதாக பிக் பாஸ் தகவல்கள் உறுதியாக தெரிவிக்கின்றன.



இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் மீதமுள்ள போட்டியாளர்களின் ஓட்டிங் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் வழக்கம் போல அர்ச்சனா தான் 41% வாக்குகளை பெற்று முன்னணியில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக மணி, தினேஷ் ஆகியோர் இருக்கின்றனர்.

அதேவேளை, இறுதியாக மாயா, மற்றும் பூர்ணிமா காணப்படுகின்றனர். எனினும் இந்த வாரம் அவர்கள் வெளியேறுவர்களா? இல்லை அவர்களுக்கு பதிலாக வேறு யாரும் பலியாவர்களா என பொறுத்திருந்து பார்ப்போம்,

Advertisement

Advertisement