• Jan 19 2025

தன் கர்ப்பத்தை போட்டோ ஷூட் மூலம் அறிவித்த நடிகை அமலாபால்! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் அமலாபால். இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மைனா திரைப்படம் தான். கிராமத்துப் பெண்ணணாக நடித்த இவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.அத்தோடு படவாய்ப்புக்களும் குவிய ஆரம்பித்தன.

இதையடுத்து,  தலைவா, வேலையில்லா பட்டதாரி,  வேட்டை போன்ற பல படங்களில் நடித்தார். தலைவா படத்தில் நடித்தபோது இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலிக்க தொடங்கிய அவர் பிறகு திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமணம் இரண்டே வருடங்களில் முறிந்தது. 



அதனையடுத்து சினிமாவில் கவனம் செலுத்தி சிங்கிளாக வலம் வந்த அமலா பால் கடாவர் படத்தை தயாரித்து மீண்டும் சினிமாவில் வலம் வரத்தொடங்கினார். அண்மையில் இவர் நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், திருமணமாகிய சில மாதங்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படம் மூலம் தெரிவித்துள்ளார் நடிகை அமலாபால். இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.


Advertisement

Advertisement