• Nov 09 2024

உச்சகட்ட பயத்தில் ரோகிணி.. முத்து, மீனாவை வீட்டை விட்டு துரத்திய விஜயா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில், விஜயா டான்ஸ் கிளாஸ் நடத்திக் கொண்டிருக்கும்போது ரதியை கவனிக்கின்றார். அவர்கள் இருவரும் சிரித்து சிரித்து டான்ஸ் ஆடுவதை பார்த்து ரதியை முன்னுக்கு வருமாறும், இனிமேல் தனியாக சென்று பிராக்டிஸ் பண்ண வேண்டாம் என்றும் சொல்லுகின்றார். இதனால் அவர் எங்க மீது சந்தேகமா என்று கேட்க அப்படி ஒன்றுமில்லை என்று சமாளிக்கின்றார்.

அதன் பின்பு பார்வதி ஏன் அவர்களிடம் அப்படி நடந்து கொண்டாய் என கேட்க, மீனா அவர்கள் கட்டிப்பிடித்துக் கொண்டு இருந்ததாக சொல்லுகின்றார் என்று சொல்லவும், பார்வதி அப்படி என்றால் இவர்கள் லவ் பண்ணி வீட்டை விட்டு ஓடினால் போலீஸ் பிரச்சனையாகிவிடும் என்று விஜயாவை பயமுறுத்துகிறார். மேலும் எனது வீட்டில் வைத்து தான் பிரச்சனை வரும் அவர்களை வகுப்பில் இருந்து நிப்பாட்டுமாறும் சொல்லுகின்றார். ஆனாலும் அப்படி எல்லாம் நடக்காது என்று விஜயா சொல்கின்றார்.

மறுபக்கம் தனக்கு லெட்டர் தந்தது யார் என்பதை அறிவதற்காக ரோகிணியை கூட்டிக்கொண்டு கோயிலுக்கு வருகின்றார் மனோஜ். அங்கு பிஏ சாமியார் வேடத்தில் நிற்கின்றார். மனோஜை பார்த்ததும் உனது பெயர் மனோஜ் தானே என்று அவரைப் பற்றி சில விடயங்களை சொன்னதோடு மீண்டும் ஒரு லெட்டரை கொடுக்கின்றார். 


அதை வாசித்துப் பார்த்த மனோஜ் சூப்பர் ஸ்டாரின் படப் பெயர் தான் அவனுக்கு என யோசிக்கும்போது முத்துவின் பெயர் பிடிபடுகின்றது. இதனால் முத்துவின் போட்டோவை காட்டி அவரிடம் விசாரிக்க, பிஏவும் தன்னை போலீசில் மாட்டி விட்டது இவர் தான் என்று வேண்டும் என்றே முத்து தான் லெட்டர் கொடுத்ததாக சொல்கின்றார். மனோஜ் போன பின்பு ரோகினியிடம் காசை ரெடி பண்ணுமாறு சொல்லி அனுப்புகின்றார்.

இதைத்தொடர்ந்து நேரே வீட்டுக்கு வந்த மனோஜ் நடந்தவற்றை விஜயாவிடம் சொல்லி இதற்கெல்லாம் காரணம் முத்து தான் என சத்தம் போடுகின்றார். மீனா அவர் அப்படி செய்திருக்க மாட்டார் என்று சொல்லவும் விஜயா செய்திருப்பீர்கள் என்று சொல்லுகின்றார். அது மட்டும் இன்றி இனிமே இந்த வீட்டில் இருக்க வேண்டாம், இரண்டு பேரையும் வெளியே போகுமாறு மீனாவிடம் விஜயா சொல்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement