தமிழ் திரையுலகில் தனித்துவமான கதைகளைத் தேர்வு செய்து, ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் சூர்யா. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான படங்கள் பெரிதளவில் வெற்றியை கொடுக்கவில்லை.
இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 46 படத்தை வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார். வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் என்பதால் சூர்யா 46 மீதான எதிர்பார்ப்பும் அதிகம் இருக்கிறது.
ஏற்கனவே சூர்யா நடிக்கும் 46வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 10.18 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சூர்யா நடிக்கும் 46வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. குறித்த போஸ்டரில் சூர்யா ஒரு கையில் குழந்தை மற்றும் பால் பாட்டிலுடன் காட்டப்படுகிறார். இது ரசிகர்களிடையே மேலும் சஸ்பென்ஸை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படத்தின் டைட்டில் 'விஸ்வநாத் & சன்ஸ்' என வெளியாகி உள்ளதோடு, அதனை பார்க்கும்போதே இது ஒரு பெரிய பணக்கார குடும்பத்தை மையமாகக் கொண்டு, கார்ப்பரேட் பின்னணியில் நகரும் கதையாக இருக்கலாம் என நெட்டிசன்கள் ஊகித்து வருகின்றனர்.
குடும்பம், சொத்து, அதிகாரம் மற்றும் உறவுகளின் சிக்கல்கள் ஆகியவை கதையின் மையமாக இருக்கக்கூடும் என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஒருபுறம் கார்ப்பரேட் பின்னணி, மறுபுறம் குழந்தையுடன் சூர்யா, இந்த இரண்டு அம்சங்களும் இணைந்துள்ளதால், குடும்பத்தின் உணர்ச்சி சார்ந்த கதையா? அல்லது அதிகாரப் போட்டியில் சிக்கிய ஒரு தந்தையின் போராட்டமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பகிர்ந்து கொண்ட சூர்யா, "வித்தியாசத்துடன் காதல், ஒரு நோக்கத்துடன் குடும்பம் - ஜூலை மாதம் ஒரு முழுமையான பொழுதுபோக்காக நாங்கள் வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
தற்போது இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி, இணையத்தை கவர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!