டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டி ரசிகர்களுக்கு மறக்க முடியாத அதிரடி அனுபவத்தை வழங்கியது. இரு அணிகளும் தாக்குதல்மிகு ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தப் போட்டியில், இறுதியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்தது.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. துவக்கத்திலேயே அதிரடியாக ஆடிய அவர்கள், நடுப்பகுதியில் ரன் வேகத்தை நிலைநிறுத்தி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவாலை ஏற்படுத்தினர்.
ரோஸ்டன் சேஸ் 40 ரன்கள், ஜேசன் ஹோல்டர் 37 ரன்கள், ரோவ்மன் பாவெல் 34 ரன்கள் எடுத்தனர். குறிப்பாக கடைசி ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தாக்குதலாக விளையாடி ஸ்கோரை 190 ரன்களைத் தாண்டச் செய்தனர். 196 ரன்கள் என்ற பெரிய இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
196 ரன்கள் என்ற சவாலான இலக்கை துரத்த களமிறங்கிய இந்திய அணி துவக்கத்தில் சற்றே தடுமாறினாலும், பின்னர் நடுப்பகுதியில் ஆட்டத்தை கைப்பற்றியது. முக்கியமாக, கேரளாவை சேர்ந்த நட்சத்திர வீரர் Sanju Samson அபாரமான இன்னிங்ஸ் ஒன்றை வெளிப்படுத்தி அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அதிரடியாக ஆடிய அவர் 97 ரன்கள் குவித்து வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார். அவரின் இன்னிங்ஸில் பல பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் இடம்பெற்றன. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் பல்வேறு திட்டங்களை முயற்சித்த போதும், சஞ்சுவின் துல்லியமான ஷாட்கள் மற்றும் அமைதியான அணுகுமுறை இந்திய அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தது.
இறுதியில், இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இந்த போட்டியில் 97 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
சஞ்சுவின் இந்த அற்புதமான ஆட்டத்தை மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “சஞ்சு சாம்சனின் அற்புதமான ஆட்டத்தை பார்த்தது மிகவும் உற்சாகமாக இருந்தது. அவரது குணத்தையும், திறமையையும் வெளிக்காட்டிய ஒரு தலை சிறந்த இன்னிங்ஸ் இது.” என குறிப்பிட்டுள்ளார்.
மோகன் லாலின் இந்த பாராட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் சஞ்சுவை வாழ்த்தி பதிவுகள் செய்து வருகின்றனர்.
Listen News!