பெரம்பலூர் அருகே சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் சின்னத்திரை நடிகை தேவி பிரியா விபத்துக்குள்ளான சம்பவம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலை (NH) வழியாக பயணம் செய்து கொண்டிருந்த நடிகை தேவி பிரியாவின் கார், பெரம்பலூர் அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென டயர் பஞ்சராகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கார் ஓட்டுநர் முத்து கணேஷ் வாகனத்தை சாலையோரமாக நிறுத்தி டயரை மாற்ற முயன்றுள்ளார்.
அந்த சமயத்தில், பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நின்றிருந்த காரின் மீது மோதியது.
இந்த விபத்தில் கார் டிரைவர் முத்து கணேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். நடிகை தேவி பிரியாவிற்கு அதிர்ஷ்டவசமாக எந்தக் காயமும் இன்றி உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது. அதேவேளை, அவருடன் பயணம் செய்த உதவியாளர் திவாகர் படுகாயமடைந்துள்ளார். அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் வெளியானதும், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Listen News!