• Apr 12 2026

மழையும் வெயிலும் ஒரே நேரத்திலா.? வெளியானது விஷ்ணு விஷாலின் புதிய படப் போஸ்டர்.

Aathira / 5 days ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான இரண்டு வானம் பற்றிய அப்டேட் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜூ  நடித்துள்ளார். இந்த படத்தை ராம்குமார் இயக்கியுள்ளார். ஏற்கனவே ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த முண்டாசுப்பட்டி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

அதனைத் தொடர்ந்து, சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து உருவாக்கிய ராட்சசன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

இந்த வெற்றிக் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ள நிலையில், புதிய படத்திற்கு 'இரண்டு வானம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் திரில்லர் மற்றும் உணர்ச்சி கலந்த கதையம்சத்துடன் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், 'இரண்டு வானம்'  படத்தின் வெளியீட்டை அறிவிக்கும் வகையில் புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. குறித்த போஸ்டரில் ''மழையும் வெயிலும் ஒரே நேரத்தில் பெய்யும்போது… அது ஒரே வானம் அல்ல என்பது உங்களுக்குத் தெரியும்'' என கேப்ஷன் போடப்பட்டுள்ளது.

மேலும், கொடைக்கானலில் 150 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. இயற்கை அழகை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்ட இந்த படம் காட்சியமைப்பில் தனித்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் மூலம், இப்படம் விரைவில் கோடை வெளியீடாக திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement