நடிகர் ஆர்யா நடிப்பில் இறுதியாக தமிழில் கேப்டன், காதர் பாட்ஷா மற்றும் முத்துராமலிங்கம் ஆகிய படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன. அதற்குப் பின்னர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் வேட்டுவம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இயக்குனர் ஜீவா சங்கர் இயக்கத்தில் ஆர்யாவின் 40வது படத்திற்காக தயாராகி வருகிறார். அதில் இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் ஆர்யா குறிப்பிட்ட படத்தில் நடிக்கும் நடிகைகளுடன் உடற்பயிற்சி கூடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் ஆர்யா நடிப்பில் உருவாகி 2 ஆண்டுகளாக திரைக்கு வராமல் இருந்த Mr X திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தப் படம் எதிர்வரும் ஏப்ரல் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான FIR படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இதில் சரத்குமார், அதுல்யா ரவி, கௌதம் கார்த்திக், ரைசா வில்சன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கான பணிகள் 2024ஆம் ஆண்டே முடிந்துவிட்டன. ஆனாலும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இந்தப் படம் திரைக்கு வராமல் இருந்தது. இவ்வாறான நிலையில் இந்தப் படம் எதிர்வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!