• May 29 2023

விஜய் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டதா?.. வெளியான சூப்பர் தகவல்..!

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சமீபத்தில் வாரிசு படத்தில் நடித்தார். இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார்.அத்தோடு இப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. வாரிசு படம் பெற்ற கவலையான விமர்சனத்தின் காரணமாகவும், பீஸ்ட் சந்தித்த மோசமான தோல்வியின் காரணமாகவும் லியோ படத்தை எப்படியாவது ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டுமென்பதில் முனைப்போடு இருக்கிறார் விஜய்.

 டாப் ஹீரோவாக இருக்கும் விஜய் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி பல விஷயங்களை செய்துகொண்டிருக்கிறார். இதனால் அவர் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறி தெரிவதாக பலர் கூறினர். மேலும் இப்படிப்பட்ட சூழலில் தலைவா படத்துக்கு எழுந்த சிக்கல் காரணமாக விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் கூறினர். ஆனால் விஜய் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

சில காலம் அரசியல் ரீதியாக எந்த மூவ்வையும் எடுக்காத விஜய், சமீபத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய அறிவுறுத்தியிருந்தார்.அத்தோடு  வருங்காலத்தில் அரசியலுக்கு வந்தால் தலித்துகளின் கவனத்தை ஈர்க்க இது உதவும் என அவர் நினைத்ததால்தான் இந்த ஏற்பாடு என சிலர் கூறுகின்றனர். ஆனால் இது அரசியலுக்கான அடி அல்ல என விஜய் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

நிலைமை இப்படி இருக்க சமீபத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. அதில் அனைத்து மாவட்டங்களிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை அழைத்து ஊக்கத்தொகை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நடத்த திட்டமிட்டிருக்கிறார் என்றும் தெரிய வந்ததை அடுத்து; விஜய் நிச்சயம் அரசியல் பாதையில் கால் பதிக்கப்போகிறார் என ஆரூடங்கள் கூறப்பட்டன.

இவ்வாறுஇருக்கையில்  திருவாரூர் அருகே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மக்கள் இயக்க வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட மாணவர் அணி தலைமை சார்பி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் 50க்கும் மேற்ற பொறுப்பாளரும், உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இக்கூடத்தில் விஜய் பிறந்தநாள் அன்றுநலத்திட்ட உதவிகள், விவசாய பயன்பாட்டிற்கு உரிய கருவிகள் வழங்கப்படும் எனவும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

 அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மக்கள் இயக்க மாணவர் அணி மாவட்டச் செயலாளர் ஆனந்த் கூறுகையில், ''பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றவரை ஒவ்வொரு தொகுதி வாரியாக கணக்கெடுத்து சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு அழைத்து சென்று பரிசு சான்றிதழ்கள் வழங்கப்படும். விஜய் பிறந்தநாளுக்கு பின்பு நல்ல ஒரு மாற்றம் வரும்.

இதனை  அடுத்த மாதம் சென்னையில் பெரிய அளவில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கூட்டம் நடைபெறும் என சொல்லப்படுகிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் தொகுதி வாரியாக அரசியல் நிலவரம் குறித்து கணக்கெடுக்க வேண்டும் என கூறி இருக்கிறார்கள். எனினும் அதனை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் இந்த மாத இறுதிக்குள் அதனை அனுப்ப சொல்லி இருக்கிறார்கள்" என்றார்.


Advertisement

Advertisement

Advertisement