• Jun 04 2023

வசூலில் படுத்த 'கஷ்டடி' படம்... 3நாட்கள் முடிவடைந்தும் இவ்வளவு தானா..? கடும் அப்செட்டில் படக்குழு..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கஸ்டடி'. இதில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும், வில்லனாக அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். அத்தோடு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்து உள்ளனர். 

இந்நிலையில் இப்படமானது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் கடந்த 12-ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. இருப்பினும் ரிலீஸ் ஆன முதல் நாளே இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தமையினால் வசூலும் குறைவடைந்து. 


அந்தவகையில் கஸ்டடி படம் ரிலீசான முதல் நாளில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளையும் சேர்த்து ரூ.3.2 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. அதேபோன்று இரண்டாம் நாளில் ரூ.3 கோடி வசூலித்த இப்படத்தின் வசூல் ஞாயிற்றுக்கிழமை அதிகரிக்கும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. 


ஆனால் துரதிஷ்டவசமாக அன்றைய தினம் இப்படத்தின் வசூல் மாபெரும் சரிவை சந்தித்துள்ளது. அந்தவகையில் நேற்று இப்படம் வெறும் ரூ.1.75 கோடி மட்டுமே வசூலித்து இருக்கின்றது. இதனால் படக்குழுவினர் பெரிதும் அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement