• Nov 12 2025

தனுஷுடன் மாரி செல்வராஜ் மீண்டும் சேர்வது உறுதியா.? அவரே சொன்ன உண்மை.! படுவைரல்.!

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர் மாரி செல்வராஜ் பல பிரமாண்டமான படங்களின் வெற்றிக்குப் பிறகு, தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'பைசன்' திரைப்படம் அவரது இயக்கத்தில் அக்டோபர் 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.


இந்தப் படம் வெளிவர முன்பாகவே, அவரது அடுத்த புரொஜெக்ட் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த எதிர்பார்ப்பை உறுதிப்படுத்தும் விதமாக, மாரி செல்வராஜ், தனது அடுத்த படத்தை தனுஷுடன் இணைந்து செய்யவுள்ளதாக அதிகாரபூர்வமாக கூறியுள்ளார்.

"கர்ணன்" படத்தின் வெற்றி இதுவரை மறக்க முடியாத ஒன்று. அந்த படத்தில் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் இணைந்து மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். சமூகநீதி, அதிகாரம், எதிர்ப்புமிக்க மக்கள் இவை அனைத்தையும் ஒரு கலைபூர்வமான வடிவத்தில் வெளிப்படுத்திய அந்த படம், விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது.


அந்த வெற்றிக் கூட்டணியே, இப்போது மீண்டும் இணைகிறது, மேலும் இந்த முறை அவர்களது திட்டம் ஒரு மாபெரும் வரலாற்று படமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 

சமீபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மாரி செல்வராஜ், “பைசன் படம் முடிந்ததும் என் அடுத்த படம் தனுஷோட தான். அது ஒரு பெரிய Historical Canvas படமா இருக்கும்,” எனக் கூறினார்.

மேலும் அவர், “நான் தற்போது தாணு, ஐசரி கணேஷ், மற்றும் Prince Pictures உடன் புரொஜெக்ட் ஒன்றில் கமிட்டாகி உள்ளேன்... அவை முடிந்த பிறகு தான், தனுஷுடன் அடுத்த மெகா புரொஜெக்ட் ஆரம்பிக்கப் போகிறேன்,” என்றார். இது மாரி செல்வராஜ் ரசிகர்களுக்கும், தனுஷ் ரசிகர்களுக்கும் ஒரு விசேஷமான அப்டேட் ஆகும்.

Advertisement

Advertisement