• Nov 13 2025

அரசன் Coming Soon.. STR-49 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.! என்ன தெரியுமா.?

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் ரசிகர்களை பரபரப்பூட்டும் கூட்டணிகளில் ஒன்று வெற்றி மாறன் – சிம்பு இணையும் புதிய படம் “அரசன்”. STR-ன் (சிம்பு) 49வது படமாக உருவாகும் இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு தொடக்கத்திலிருந்தே உயர்வாகவே காணப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ப்ரோமோ (promo) வெளியாகும் தேதி மற்றும் நேரம் தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.


தயாரிப்பாளர் கலாநிதி தாணு வெளியிட்டுள்ள தகவலின்படி, அக்டோபர் 16ம் தேதி மாலை 06:02 மணிக்கு, “அரசன்” ப்ரோமோ திரையரங்குகளில் பிரத்யோகமாக (Exclusive Screening) திரையிடப்படும்.

அதன்பிறகு, அக்டோபர் 17ம் தேதி காலை 10:07 மணிக்கு, ப்ரோமோ யூடியூப் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களில் வெளியிடப்படும்.

இரண்டு கட்டங்களில் ப்ரோமோவை வெளியிடும் இந்த புது முயற்சி, ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, 16ம் தேதியில் இருந்து திரையரங்கங்களில் ப்ரோமோவை காண்பிக்கும் திட்டம், மார்க்கெட்டிங் யுக்தியாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement