• Jan 19 2025

சினிமா பிரியர்களுக்கு ராஜவிருந்தான அரச ஓடிடி தளம்! இதில் என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

அண்மைக்காலமாகவே திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் ஓடிடி நிறுவனங்களுக்கு இடையில் தொடர் மோதல்கள் நடைபெற்று வருகிறது.

திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாவதால்  திரையரங்க வசூல் பாதிப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இவ்வாறான சூழலை எதிர்கொள்ளும் வகையில் கேரள மாநில அரசு ‘சி ஸ்பேஸ்’ என்ற ஓடிடி தளம் ஒன்றை புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளது.

அதாவது, மாநில அரசு ஒன்று  ஓடிடி தளம் ஒன்றை ஆரம்பித்து வைப்பது இதுவே முதல்முறையாக காணப்படுகிறது. சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள், நல்ல திரைப்படங்கள் மற்றும் ஆவணப் படங்களை மக்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் இந்த ஓடிடி தளத்தை கேரளா முதலமைச்சர் அறிமுகப்படுத்தி உள்ளார்.


அத்துடன் சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளியாகும் சில படங்களும் இந்த தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசின்  இந்த முயற்சி திரையரங்கம் மற்றும் ஓடிடி தளங்களுக்கு இடையிலான மோதல்களை சரி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதுமட்டுமின்றி  'Pay-per view' என்கிற அடிப்படையில் இதற்கான கட்டணமாக 75 ரூபாவை வசூலிக்க முடிவு செய்துள்ளார்களாம். அதன்படி அந்த படங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கு அதன் தயாரிப்பாளர்களை சென்றடையும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கேரளாவை காட்டிலும் இந்த பிரச்சனை தமிழ்நாட்டில் தீவிரமாக இருப்பதால் இதே மாதிரியான ஒரு அணுகுமுறை அவசியமானது என சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement