• Jul 28 2026

G. V. பிரகாஷ் சினிமாவிலிருந்து விலகிறாரா? அடுத்த மூவ் என்ன தெரியுமா? லீக்கான தகவல்கள்...

shali / 1 month ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளர் மற்றும் நடிகரான G. V. பிரகாஷ் குமார் அளித்த சமீபத்திய பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. அதில் அவர் தனது எதிர்கால திட்டங்கள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், “இன்னும் 15 வருடங்கள் சினிமாவில் இருப்பேனா என்று எனக்கே தெரியவில்லை. அதன் பிறகு முழுமையாக மக்கள் பணியில் ஈடுபடுவேன்.” என தெரிவித்துள்ளார். மேலும், ஒரே கருத்துடைய அரசியல் கட்சி இருந்தால் அதனுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.


இந்த கருத்துகள் தற்போது ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சினிமா துறையில் பல ஆண்டுகளாக இசையமைப்பாளராகவும் நடிகராகவும் பணியாற்றி வரும் ஜி.வி. பிரகாஷ், சமூகப் பணிகளிலும் ஏற்கனவே சில முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் இந்த பேச்சு, எதிர்காலத்தில் அவர் அரசியலுக்குள் நேரடியாக வரக்கூடும் என்ற ஊகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அதேசமயம், இது வெறும் தனிப்பட்ட கருத்து மட்டுமா அல்லது திட்டமிட்ட அரசியல் பயணத்தின் தொடக்கமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement

Advertisement