• Mar 13 2026

பிக்பாஸ் 7 தான் கடைசி சீசனா?- கமல்ஹாசன் எடுத்த அதிரடி முடிவு- இந்த கெட்ட பெயர் தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு பிரமாண்டமாக ஆரம்பமாகிய ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் பல டுவிஸ்டுகள் நடந்தேறி வருவதால் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

மேலும் எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இநந்த சீசனால் கமல் அதிகளவான சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.குறிப்பாக பிரதீப்பிற்கு ரெட் காட் கொடுக்கப்பட்டதால் கமல் செய்தது தவறு என்று  ரசிகர்கள் பலரும் எதிர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


இதனால் கமல் ஒரு அதிரடி முடிவு செய்துள்ளாராம்.அதாவது இனி வரும் அடுத்தடுத்த பிக் பாஸ் சீசன்களை கமல் தொகுத்து வழங்கப்போவதில்லையாம். பிக் பாஸ் 7 தான் கமல் ஹாசனின் கடைசி சீசன் என்று கூறப்படுகிறது.

அடுத்த பிக் பாஸ் 8 சீசனை வேறொரு நட்சத்திரம் தான் தொகுத்து வழங்க போகிறார் என்கின்றனர். ஆனால் இது குறித்த அதிகா்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement